app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 08 October 2018 05:03

கோவை மற்றும் உடுமலையில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு 1957 புத்தகம் முன்பதிவு கலந்துரையாடல் கூட்டம்.

கோவை மற்றும் உடுமலையில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு 1957 புத்தகம் முன்பதிவு கலந்துரையாடல் கூட்டம்.
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை. கு. இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட எரிப்பு 1957 புத்தகம் முன்பதிவு கலந்துரையாடல் கூட்டம் கூட்டம் கோவை பெரியார் படிப்பகத்தில் 6-10-2018 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் வெ.ஆறுச்சாமி, கழக வெளியீடுச்  செயலாளர் இரா.மனோகரன், பொள்ளாச்சி நகர செயலாளர் அசோக், கோவை மாநகர தலைவர் சோமசுந்தரம், வடக்கு மாவட்ட தலைவர் இராமசாமி, கோவை மாநகரம் அமைப்பாளர் ஜீவானந்தம், கோவை மாநகரம் பொருளாளர் இரஞ்சித், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மோனஜ், நீலகிரி மாவட்டம் அமைப்பாளர் கி.பரத் அலுவுலக பொறுப்பாளர் ஆனந்த் கொண்டாய்சாமி, மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்பதிவு செய்வதற்கான ரசீது புத்தகமும், துண்டறிக்கைகளும் தோழர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன.
உடுமலை நகர, ஒன்றிய மடத்துக்குளம் ஒன்றிய தந்தை பெரியார் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் இன்று (7/10/2018) காலை 10 மணிக்கு உடுமலையில் உடுமலை நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் மயில்சாமி முன்னிலையில் நடைபெற்றது. சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு 1957 புத்தகம் முன்பதிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. முன்பதிவு செய்வதற்கான ரசீது புத்தகமும், துண்டறிக்கைகளும் தோழர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. கூட்டத்தில் கருமலையப்பன்,யாழ் நடராசன், ரமேஷ், சிவசங்கர், கதிரவன், மோகன்குமார், மயில்சாமி, சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காணொளி : https://www.facebook.com/thanthaiperiyardravidarkazhagam
செய்தி : உடுமலை சிவசங்கர்

 

Last modified on Monday, 08 October 2018 05:10