app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Tuesday, 16 October 2018 04:25

24 மணி நேரத்தில் இந்தி அழிப்பு போராட்டம் வெற்றி

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள மைல்கற்களில் இந்தி எழுத்துக்களை பயன்படுத்தி,இந்தி மொழியை வேகமாக திணிக்கும் வேலையில் ஈடுபட்டது தமிழர் விரோத ஆர்எஸ்எஸ்,பாஜக அரசு.
எனவே ஞாயிறு 14/10/2018 காலை 11 மணி அளவில் கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள இந்தி எழுத்துக்கள் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் இந்தி அழிப்பு போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்தை அடுத்து இன்று பொள்ளாச்சி-கோவை நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து மைல்கற்களிலும் இருந்த இந்தி எழுத்துக்கள்  நெடுஞ்சாலை துறையாலேயே அழிக்கப்பட்டுள்ளது.
இந்தியை அழித்த பின்னர், அந்த இடத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளது.
வடவரின் இந்தி திணிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் பெரியாரின் கருஞ்சட்டை படை விரட்டி அடிக்கும்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இந்தி அழிப்பு  போராட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொளகிறோம்.