app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 21 October 2018 08:27

சென்னையில் அகழ்வாராய்ச்சிதுறை - கீழடி மோசடி சிறப்பு கருத்தரங்கம்

20-10-2018 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் திராவிடர் களம் சார்பில் அகழ்வாராய்ச்சியில் கீழடிமோசடி குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் தலைமையேற்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார் கீழடி ஆய்வில் நடைபெற்று வருகின்றன மோசடி குறித்து விரிவாக பேசினார் பின்னர் தோழர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். நிகழ்ச்சி தொடக்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
சென்னை மாவட்ட செயலாளர் சு.குமரன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சென்னை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தோழர் கிரேசி,  காஞ்சிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ம .ராஜ்குமார் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் இக் கருத்தரங்கதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜனார்த்தனன்.
புகைப்படம் மற்றும் செய்தி.
தோழர்  சரவணன். சென்னை.