app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 25 October 2018 05:58

சீர்காழியில் தந்தை பெரியார் சிலையின் மீது சாமி படத்தை வைத்து அவமதிப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் தந்தை பெரியார் சிலையின் மீது சாமி படத்தை வைத்து அவமதிப்பு.

24-10.2018 புதன்கிழமை சீர்காழியில் தந்தை பெரியாரின் சிலை மீது சாமி படத்தை வைத்து அவமதித்ததை அடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம் தலைமையில் சீர்காழி காவல்நிலையத்தில் கருஞ்சட்டையினர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் அப்படத்தை அகற்றினர்.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், அப் புகுதியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் தோழர்கள் முழக்கமிட்டனர்.

இந்த நிகழ்வில் சீர்காழி நகர செயலாளர் பார்த்திபன், ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், நகர தலைவர் மனோஜ், பாலசந்தர், சாரதி மற்றும் தோழமை அமைப்பை சார்ந்த தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Last modified on Thursday, 25 October 2018 05:59