app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 25 October 2018 06:56

திருப்பூரில் மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை

திருப்பூர் முதன்மை கல்வி அதிகாரி சாந்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை கழகத் தோழர்கள் கைது.
புராண, இதிகாசப் புரட்டுகளை பள்ளி மாணவர்க்கு பாடமாக போதிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கும்பல் பிதற்றுவதற்கு திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுமார் 600 ஆசிரியர்களைத் திரட்டி ஏற்பாடு செய்ததைக் கண்டித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், பொதுசெயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் 24.10.18 புதன்கிழமை மாலை 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இரவு 9.30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் சண் முத்துக்குமார்
மாநில செயற் குழு உறுப்பினர் அங்க குமார்
தினேஷ், கார்த்திகேயன், பொறியாளர் ஆனந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆறுமுகம்
திருப்பூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் யாழ் ஆறுச்சாமி
தந்தை பெரியார் திராவிடர் கழக கோவை மாநகரம் தலைவர் சோமசுந்தரம்
குமுர குரு ,
பழனியப்பன்உமேஸ்.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் க.சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Last modified on Thursday, 25 October 2018 07:26

Related Video

திருப்பூரில் மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை