Tuesday, 30 October 2018 06:15

திண்டுக்கல் மாநகராட்சியில் வீட்டுவரி 'குழாய் வரி' உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்.

திண்டுக்கல்லில் மாநகராட்சி அலுவலகம் அருகில் 29.10.2018 திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு மாநகராட்சியில் வீட்டுவரி 'குழாய் வரி' உயர்வை கண்டித்து அனைத்து காட்சிகள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில இணை பிரச்சார செயலாளர்.தோழர் துரை சம்பத் திண்டுக்கல் மாநகராட்சியில் வீட்டுவரி 'குழாய் வரி' உயர்வை கண்டித்து உரையாற்றினார். திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழகத் தோழர் பலர் கலந்துகொண்டனர்.

Last modified on Wednesday, 31 October 2018 02:15

Related Video

Image Gallery

back to top