Wednesday, 31 October 2018 04:39

புதுவை, கோட்டைமேடு கிளை தலைவர் இரா.காத்தவராயன் அவர்களுக்கு வீர வணக்கம்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுவை மாநிலம்,கோட்டைமேடு கிளை தலைவர் இரா.காத்தவராயன் அவர்கள் நேற்று (30.10.2018) மாலை 4.50 மணி அளவில் இயற்கை எய்தினார். தோழர்  இரா.காத்தவராயன் உடல் இன்று (31.10.2018) புதன்கிழமை காலை 11 மணியளவில் புதுவை மாநிலம் காக்காயந்தோப்பு இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.
தோழர்  இரா.காத்தவராயன் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வீர வணக்கம்.
சுறுசுறுப்புக்கு தேனியையும், உழைப்புக்கு வண்டிமாட்டையும் உதாரணமாக குறிப்பிடுவார்கள்!!
எங்களை பொருத்தமட்டில் மேற்படி இரண்டுக்கும் மனித உதாரணமாய் நீதான் தெரிந்தாய்!!
உச்சி வெய்யிலை ஏமாற்றி நீ பணிமுடித்திடும்போது நிழலைத்தேடும் நாங்கள்
வெட்கி தலைகுனிவோம் !!
கட்டிட கலையில் எங்களுக்கு முன்னோடி நீ!
கழகப்பணிக்கு எங்கள் பின்னே ஓடோடிவந்தாய்!!
கொள்கைமேடாம் கோட்டைமேட்டில் தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் கிளைத்தலைவர் பொருப்பேற்றாய்!!
பொருப்பேற்ற வேகத்தில் வந்தது ஏப்ரல் 14 !
அடடா ,,!!
நாம் வைத்த அம்பேத்கர் சிலை அருகே பிறந்தநாள் கூட்டம். போட்டோமே!!!
என் பெயரை ஏன் நோட்டீசில் போட்டீங்கன்னு கேட்டு நீ கடிந்துகொண்டதும், கூச்சத்தோடு மேடையேறி தலைமையேற்றதும்
நீங்கா நினைவில்!!!
கூட்டத்துக்குத்தானே தலைமையேற்க சொல்லி வற்புறுத்தினோம்!!
மரணத்திற்கு அல்லவே???
உடன் பிறந்தவர்களை விட உன்னைத்தானே அண்ணன் என்றழைப்பதில் மகிழ்ந்தோம்!
எங்களை ஏன் ஏமாற்றிசென்றாய்!!
வீதிநாடகத்தில் உன் முதல் பிள்ளை ஐயர் வேஷம்போட்டுக்கொண்டு பார்ப்பனியத்தை தோலுரிக்கும்போதும் ,இரண்டாவது பிள்ளை பறை இசையை அதிர வைக்கும்போதும் பின்வரிசையில் நின்றுகொண்டு நீ ரசிப்பதை பார்த்து நாங்கள் கண்ணடிப்போமே !!
இனி அது நடக்குமாண்ணா???
கருஞ்சட்டை அணிந்து களத்தில் நிற்க இரண்டு பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டோம் என்ற கர்வத்தில் கண்மூடினாயோ அண்ணா!!
சுரேஷ் புதுவை மாநில செயலாளர்   9345412546

Image Gallery

back to top