app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 31 October 2018 06:37

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து இயக்க மற்றும் பள்ளி மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் நினைவாக சூலூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 27.10.2018  சனிக்கிழமை  காலை 10 மணிக்கு 7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும்  மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி தபால் அட்டைகளில் சுமார் 1000  கையெழுத்துக்கள்  சூலூர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடம் பெறப்பட்டு அவை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
சூலூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு  கவிஞர் அறிவு, 10/- ரூபாய்க்கு வெளிட்ட தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்"  என்ற புத்தகம் 500 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் அவர்கள் மாணவிகளிடம் பெரியாரின் பெண்ணியக் கருத்துகளை எடுத்துரைத்து புத்தகங்களை வழங்கினார். மாணவிகளும் பொதுச்செயலாளர் அவர்களிடம் கேள்விகளை தொடுத்து விளக்கங்களைப் பெற்றனர். விழாவிற்கான அனுமதியைப் பெற்று விழாவினை தொகுத்து வழங்கியவர் வெற்றிச் செல்வி அவர்கள்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் அகில் குமரவேல் தலைமை வகித்தார் நகர செயலாளர் வேலுச்சாமி, பேரூரராட்சியின் முன்னாள் தலைவர் தேவா, திமுக செல்வராஜ், இரட்டைப்பாதை ஆசிரியர் வள்ளுவராசன், தென்மொழி  தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் கழக தோழர் பலர் கலந்து சிறப்பித்தனர்.
Last modified on Wednesday, 31 October 2018 06:56