app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 14 November 2018 09:12

கோவையில் மாவீரன் நரகாசுரனுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சி.

 

கோவையில் மாவீரன் நரகாசுரனுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சி.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக 06-11-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவீரன் நரகாசுரனுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சி கோவையில் தந்தை பெரியார் படப்பிகத்தில் நடைபெற்றது .

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திராக எழுதாளா் வே. மதிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
இதில்  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அமைப்பு செயலாளா் வெ. ஆறுச்சாமி, கோவை மாநகரம் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சாஜித், பொருளாளர் இரஞ்சித். கோவை வடக்கு மாவட்ட தலைவர் து .இராமசாமி, கோவை தெற்கு மாவட்ட தலைவர் அகில் குமரவேல் மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.


வழக்கறிஞா் வெண்மணி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை தலைவர்  கரிகாலன் கோவை, நீலகிரி மண்டல அமைப்புச் செயலாளர் சுசி.கலையரசன் மாநகர துணை செயலாளர் கோவை குரு ,மாநகர முன்னாள் செய்தி தொடர்பாளர் .ப. மாணிக்கம் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதியம் அசைவம் விருந்து வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மகளிர் அணி பொறுப்பாளர் தோழர் லலிதா கோவை மாநகர பொருளாளர் இரஞ்சித் தம்பதியினர் அவர்களின் மகனுக்கு தமிழ் அமிழ்தன் என்று பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Last modified on Wednesday, 14 November 2018 09:30

Related Video