app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 26 November 2018 19:53

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்தநாள் விழா

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்தநாள் விழா  இன்று  26-11.2018 சென்னை, கோவை மற்றும்  பொள்ளாச்சி
ஆகிய பகுதிகளில் 26-11.2018 திங்கட்கிழமை அன்று கொண்டாடப்பட்டது.
சென்னை இராயப்பேட்டையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவு 12.00 மணிக்கு சென்னை மாவட்ட தலைவர் சா.குமரன் தலைமையில் தலைவரின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது,
இதில் காஞ்சிபுரம்  மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார்,  பரந்தாமன்,  திலீபன், ஜனா, இயக்குநர் கெளதன்,மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சி  மற்றும் ஆதரவு இயக்கங்கள் பங்கேற்றனர், இயக்குனர் கௌதமன் கேக் வெட்டி துவக்கிவைத்தார் சிலம்பாட்டம், புலியாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது 100 க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்த விழாவில் தோழர்கள் அனைவருக்கும் மாட்டுக்கரை விருந்து வழங்கப்பட்டது.
கோவையில் கழகத்தின் அமைப்புச் செயலாளர் அண்ணன் வெ. ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாநகர  தலைவர் கா.சோமசுந்தரம், கோபால் மாநகர  செயலாளர் சாஜித்,  துணை செயலாளர் மணிகண்டன்,  துணை அமைப்பாளர்கள் பிரசாத், காப்பாளர்கள் : பழனியப்பன்,  மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மனோஜ்.
கோவை தெற்கு  மாவட்டத் செயலாளர் அகில் குமரவேல்,
தெற்கு மாவட்ட தலைவர்  செயலாளர் கலங்கள் வேலுச்சாமி,
கழக தோழர்கள் மகாலிங்கம், ஆனந்த், கனகராஜ், ஐயப்பன், சிங்கை மூர்த்தி, டென்னிஸ், உமேஸ், தங்கதுரை, இராசமாணிக்கம்,  பத்தரன், வேலுமணி  மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தோழர் நிர்மல் குமார், வெங்கட் மற்றும் தோழர்கள் பலர் கலந்து.
பொள்ளாச்சி மதிமுக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புவழங்கப்பட்டது
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தந்தை பெரியார் திராவிடர்
விடுதலை சிறுததைகள் கட்சி
ஆதித்தமிழர் பேரவை மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். கழகத்தின் சார்பில்  பொள்ளாச்சி நகர கழக செயலாளர் அசோக் மாணிக்கம் , பெரியசாமி, ராஜேஸ்,  மற்றும் கருப்புசாமி  ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் சீர்காழியில் தமிழ்  தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 64 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 6 ஆம் ஆண்டு குருதிகொடை முகாம் 18.11.2018 ஞாயறுக்கிழமை காலை 9.00 மணிக்கு தோழர் ப.வ .பெரியார்  செல்வம் நாகை மாவட்ட செயலாளர் தலைமை நடைபெற்றது.
தமிழரின் தாகம்
தமிழீழ தாயகம்
Last modified on Tuesday, 27 November 2018 04:42

Related Video