app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 28 November 2018 07:20

தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள்

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில்  27.11.2018 மாவீரர் நாள் நிகழ்வுகள்  கோவை, பொள்ளாச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்கிளில் நடைபெற்றது.

கோவை :-

கோவையில் மாநகர செயலாளர் தோழர் இ.மு.சாஜித் தலைமையில் மாலை 7 மணிக்கு மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது இன் நிகழ்வில் கோவை மாநகர தலைவர் கா.சோமசுந்தரம், துணை தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் இரஞ்சித் பிரபு, காப்பாளர் பழனியப்பன்,  துணை செயலாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர்
பிரசாத், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் க.சந்திரசேகர், மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மனோஜ்,

கழக தோழர்கள் மகாலிங்கம், ஆனந்த், ஐயப்பன், சிங்கை மூர்த்தி, டென்னிஸ், உமேஸ்,  பத்தரன், தி.க.சம்பத், போத்தனூர் பாலகிருட்டிணன், வேலாண்டிபாளையம் ஈஸ்வரன், முருகானந்தம், மனோன்மணி, சமீமா, வழக்குரைஞர் ஜீவா, அம்புக்கரசி, மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற அமைப்புகள்   :-

விடுதலை சிறுத்தைகள் கட்சி சுசி கலையரசன்
8 மணி நேர வேலை இயக்கம் - திருமொழி மற்றும்  தமிழினி
புரட்சிகர இளைஞன் முன்னணி கண்மணி மற்றும் அசுவின்
திராவிடர் தமிழர் கட்சி -  பேரறிவாளன் மற்றும் வெண்மணி.

பொள்ளாச்சியில் மாலை 6 மணியளவில் மறுமலர்ச்சி திமுக அலுவலகத்தில் மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழக வெளியீடுச்  செயலாளர் இரா.மனோகரன், பிரகாசு,  நகர செயலாளர் அசோக், கருப்புசாமி மற்றும் தோழர் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற அமைப்புகள்   :-
திமுக
மறுமலர்ச்சி திமுக
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தமிழ் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

மதுரை :

மெய்யப்பன் தலைமையில் மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது, அமைப்புச் செயலாளர்  அண்ணன் வெ.ஆறுச்சாமி  அவர்கள் சுடரேற்றி உரையாற்றினார்,
நிகழ்வில் பங்கேற்ற அமைப்புகள்   :-

தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி கனியழகன்
மே 17 இயக்கம் தோழர் முகிலன்
மதிமுக வழக்கறிஞர் நாகராஜ்
தைபுரட்சி தோழர் கவிதா

கழக தோழர்கள் கோவை தெற்கு மாவட்ட தலைவர்  கலங்கல் வேலுச்சாமி, மதுரை மாவட்ட அமைப்பாளர் கிட்டு ராசா, மாவட்ட தலைவர் குமுரேசன், மாணவரணி செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை தலைவர் மாயாண்டி , பாலகிருட்டிணன், சின்னசாமி மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் :-

கரூர் மாவட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கு.கி. தனபால் தலைமையில் தந்தை பெரியார் சிலை அருகில் மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


சீர்காழி :

சீர்காழியில் மாலை 6.30  மணியளவில் பழைய பேருந்து நிலையம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நகர செயலாளர் பார்த்திபன் தலைமையில் மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றத  நிகழ்வில்
நாகை மாவட்ட தலைவர் - பரசுராம்
நாகை மாவட்ட  செயலாளர் ப.பெரியார் செல்வம் -
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்
கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார்
அம்பேத்கர் அரசு பணியாளர் அமைப்பு மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Last modified on Wednesday, 28 November 2018 08:50

Related Video

மாவீரர் நாள் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோவை 27-11.2018