app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 28 November 2018 08:04

தலைமைக் கழகம் மற்றும் காஞ்சி மாவட்டம் சார்பில் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் விழா

தலைமைக் கழகம் மற்றும் காஞ்சி மாவட்டம் சார்பில் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் மாவீரர் நாள் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைமைக் கழகம் மற்றும் காஞ்சி மாவட்டம் சார்பில் 27.11.2018 மாவீரன் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் கலந்துகொண்டார். காஞ்சி மாவட்ட சார்பிலும் தலைமைக்கழகத்தின் சார்பிலும் ரூபாய் 10000/- (பத்தாயிரம்) கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வழக்கறிஞர் சங்க தலைவரிடம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் த.பெ.தி.க. தலைவர் ஆனூர் ஜெகதீசன், துணைத்தலைவர் வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோவன், காஞ்சி மாவட்ட தலைவர் கண்ணதாசன், காஞ்சி மாவட்ட செயலாளர் நாகராஜ் உட்பட வழக்கறிஞர்கள் மற்றும் த.பெ.தி.க.வினர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைக் கழகம், சென்னை.

Last modified on Wednesday, 28 November 2018 08:27