app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Monday, 03 December 2018 07:52

உடுமலை மடத்துக்குளத்தில் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

உடுமலை மடத்துக்குளம் தந்தை பெரியார் திராவிடர் கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் உடுமலையில் நேற்று (02.12.2018) நடைபெற்றது. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் சில கிராமங்களைத் தேர்வு செய்து அக்கிராமங்களில் தொடர்ச்சியாக பிரச்சாரங்கள் மேற்கொள்வதென கடந்த மாதக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய கிராமங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாத்திக்கப்பட்டது. அதன்படி உடுமலை பகுதியில் உடுமலை நகரம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், பூளவாடி ஆகிய இடங்களிலும், மடத்துக்குளம் பகுதியில் மடத்துக்குளம், குமரலிங்கம், கொழுமம், கணியூர், காரத்தொழுவு ஆகிய இடங்களிலும் தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் முதல் பணியாக பெரியாரின் கொள்கைகளை சிறு புத்தகமாக அச்சிட்டு மேற்கண்ட இடங்களில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சிவசங்கர், திருப்பூர் மாவட்ட செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
Last modified on Monday, 03 December 2018 07:58