app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 05 December 2018 10:30

கோவை விமானநிலையத்தில் ஜமாப் இசை முழங்க வரவேற்பு.

மாவீரர் நாள் நிகழ்விற்காக ப்ரான்சு சென்று 4-12-2018 அன்று மாலை 8 மணிக்கு தாயகம் திரும்பிய த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்களை சென்னை விமானநிலையத்தில் மதியம் 2 மணிக்கு சென்னை மாவட்ட தலைவர் குமரன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், பரந்தாமன் மற்றும் கழக தோழர்கள் வரவேற்றனர்.

 

அன்று மாலை 8 மணிக்கு கோவை மாநகர தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கோவை விமானநிலையத்தில் ஜமாப் இசை முழங்க வரவேற்பு. இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் அண்ணன் வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமை வகித்தார் கோவை மாநகரம் தலைவர் கா.சோமசுந்தரம் செயலாளர் இ .மு.சாஜித் பொருளாளர் இரா. இரஞ்சித் பிரபு அமைப்பாளர் ஜீவானந்தம். துணை தலைவர்கள் சண்முகசுந்தரம், சிங்கை மனோகரன் துணை செயலாளர்கள் மணிகண்டன் கோவை தெற்கு மாவட்டத் செயலாளர் அகில் குமரவேல் மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Last modified on Wednesday, 05 December 2018 15:11