Saturday, 08 December 2018 18:08

தமிழகம் மற்றும் புதுவையில் புரட்சியாளர் அம்பேத்கரின் 62 வது நினைவு நாள் நிகழ்வு

கோவை மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஆறுச்சாமி அவர்களின் தலைமையில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது, இந் நிகழ்வில் கோவை மாநகரம் தலைவர் கா.சோமசுந்தரம், காப்பாளர் பழனியப்பன்,
பொருளாளர் இரஞ்சித் பிரபு, அமைப்பாளர் ஜீவானந்தம், துணை தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர் மணிகண்டன்.
கோபால்,பிரசாத், மாகாளி, அண்ணாமலை, பாலா, டென்னிஸ், ஆனந்த்  மற்றும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.


கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அனைத்து இயக்க தோழர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


கோவை தெற்கு  மாவட்டத் செயலாளர் அகில் குமரவேல் தலைமையில் சூலூரில் புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


பொள்ளாச்சியில் ஆதிதமிழர் பேரவையின்  சார்பில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் படத்திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழாவில் ஆதிதமிழர் பேரவையின் நிறுவனர் தோழர் அதியமான், சி.பி.ம. தாலுக்கா செயலாளர் தோழர்.மகாலிங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழக வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன் ஆகியோர் உரையாற்றினார்கள். பொள்ளாச்சி நகர கழக செயலாளர் அசோக் மற்றும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர். த.மு.மு. க சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கழக வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன் உரையாற்றினார்.


சீர்காழியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்62 வது நினைவுநாளில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் தோழர் வே.பிரேம்குமார் தலைமை வகித்தார்.தந்தை பெரியார் திராவிடர் கழக நகர செயலாளர் பார்த்திபன் நகர தலைவர் மனோச் முன்னிலை வகித்தனர்.கூத்தனுர் கிளை பொறுப்பாளர் சரண் வரவேற்ப்பு ஆற்றினார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் பரசுராமன் தலைமை செயற்குழு உறுப்பினர் ப வ பெரியர்செல்வம் கருத்துரை வழங்கினர். இந்நிகழ்வில் ஆணவ கொலையை தடுத்து நிறுத்த உடனடியாக தனி சட்டம் இயற்ற கோரியும் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் அவர்கள் குழந்தைகளுக்கு சாதி அற்றவர்கள் என்று அறிவிப்பு செய்து அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.சுயமரியாதை மாணவர் இயக்கத்தின் கொள்ளிடம் ஒன்றிய அமைப்பாளர் நன்றி கூறினார்.


புதுச்சேரி தபெதிக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுவை மாநில தலைவர் வீர மோகன், புதுவை மாநில செயலாளர் சுரேஷ், இளங்கோ மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Last modified on Saturday, 08 December 2018 18:20

Related Video

Image Gallery

back to top