app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Wednesday, 19 December 2018 17:00

சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு -1957 நூல் வெளியீட்டு விழா 18.12.2018

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம்  எரிப்பு -1957, நூல் வெளியீட்டு விழா  18.12.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கோவை வி.கே.கே. சாலையில் நன்னிமங்கலம் கணேசன் நினைவுத் திடலில் நடைபெற்றது.


தந்தை பெரியார் அவர்களால் 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தஞ்சாவூரில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்து போராட்டம் நடத்தினார்,  அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறை சென்றார்கள், அவர்களுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது சிறையில் 13 பேர் இறந்து போனார்கள்.


இந்தப் போராட்ட வரலாற்றை திராவிட முன்னேற்ற கழகத்தின் வெளியீட்டு செயலாளர் திருச்சி என்.செல்வேந்திரன் அவர்கள் தொகுப்பு நூலாக எழுதியிருக்கிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத்தின் வெளியீடுச் செயலாளர் இரா.மனோகரன், கழகத்தின் வெளியீடுச்  செயலாளர் கருமலையப்பன் மற்றும் பொள்ளாச்சி பிரகாசு ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகமெங்கும் உள்ள சட்டயெரிப்பு போராளிகளை சந்தித்து சேகரித்த தகவலின் அடிப்படையில்  2500 பக்கம் கொண்ட தொகுப்பு மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டது.


(வேதங்களின் வண்டவாளம் மற்றும் ஒரு சுமரியாதைக்காரர் கதை புதுகை இராம கலியாணி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டது.)
நூல் வெளியீட்டு விழாவிற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமை வகித்தார் கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வெ.ஆறுச்சாமி அவர்கள் முன்னிலைவகித்தார், கழகத்தின் கோவை மாநகர செயலாளர் இ.மு.சாஜித் வரவேற்புரை வழங்கினார்.


நூல் வெளியீட்டு விழாவில்
வெளியீடுச்  செயலாளர் இரா.மனோகரன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் சீனி விடுதலை அரசு
மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர். துரை சம்பத்,
புதுச்சேரி மாநில கழக தலைவர் வீர மோகன் மாநில செயற் குழு உறுப்பினர் அங்க குமார் ஆகியோர் உரையாற்றினார்.


விழாவில் பங்கேற்று சிறப்பித்த அரசியல் சட்ட எரிப்பு போராளிகள்
லால்குடி முத்துச்செழியன்,  திருப்பராய்துறை குடியரசு,  குளத்தூர் பொன்னுசாமி, திருச்சங்கோடு பெருமாள் ஜெயராஜ், மற்றும் ஆனைமலை ஆறுமுகம் ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் காட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நூலை வழங்கினார்.
நக்கீரன் இதழின் பொறுப்பாசிரியர் தோழர் கோவி.லெனின் அவர்கள் நூலை பற்றிய ஆய்வுரையை வழங்கினார். இறுதியாக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


இவ்விழாவிற்கு கோவை மாநகரம்
பொருளாளர் இரஞ்சித் பிரபு
அமைப்பாளர் ஜீவானந்தம்
துணை தலைவர சண்முகசுந்தரம். துணை செயலாளர்
மணிகண்டன் , இராஜன்  வேலாண்டிபாளையம்
காப்பாளர் பழனியப்பன்.
கோவை வடக்கு மாவட்ட தலைவர் து.இராமசாமி,
வடக்கு மாவட்ட செயலாளர் க.சந்திரசேகர்
வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜோதிராம்,
ஒன்றிய தலைவர் இராமன்


நீலகிரி மாவட்ட அமைப்பாளர் கி.பரத் மற்றும் ஜெய்குமார்

 

திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர்,   மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் மா.மோகன்குமார்,
செயலாளர் மயில்சாமி,
உடுமலை நகரத் தலைவர் யாழ் நடராசன்,
உடுமலை ஒன்றிய தலைவர் விசு
பொள்ளாச்சி நகர கழக செயலாளர் அசோக்,கருப்புசாமி


புதுச்சேரி மாநில கழக தலைவர் வீர மோகன்
மாநில செயலாளர் சுரேஷ்
துணை  தலைவர் இளங்கோ,ஜகன் மற்றும் கழக தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

கோவை மாநகர தலைவர் கா.சோமசுந்தரம் நன்றியுரை வழங்கினார்.



Last modified on Saturday, 29 December 2018 06:02

Related Video