Thursday, 27 December 2018 04:55

திசம்பர் 24 தந்தை பொியாாின் 45ஆம் ஆண்டு நினைவுநாள்.

திசம்பர் 24 தந்தை பொியாாின் 45ஆம் ஆண்டு நினைவுநாள்.

கோவை
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவையில்  (24-12-18) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வீரவணக்கம் நிகழ்ச்சி  நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  மாநில அமைப்பு செயலாளர் வெ.ஆருச்சாமி, மாநகர தலைவர் கா.சோமசுந்தரம், மாநகர செயலாளர் இ.மு.சாஜித், உமேசு கோபால், பார்த்தசாரதி, பரத், சமண மற்றும்  கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தி.மு.க மற்றும் வி.சி.க. தோழர்கள் பலர் கலந்துகொண்டனர். அன்று மாலை 7 மணிக்கு சரவணம்பட்டியில் வீரவணக்கம் நிகழ்ச்சி  நடைபெற்றது நிகழ்வில் கழக தோழர்கள் மாகாளி, மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் மனோஜ், பரத், சே குவேரா மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

பழனி
அறிவுலக ஆசான் தந்தைபொியாாின் 45 -வது நினைவு தின நிகழ்சியில் பொியாா் உணா்வாளா்கள் ௯ட்டமைப்பு சாா்பில் பழனியில் அய்யா சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது பழனி பி.அர். பி. வெற்றி வேந்தன்
மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் பெரியசாமி ஒன்றிய செயலாளர் ஒன்றிய பொறுப்பாளாளர் துரைசாமி, கார்த்திக் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

சீர்காழி
இனத்தின் விடியலுக்காய் போராடிய எங்கள் கிழக்கு திசையே!
ஆண்டுகள் 45 ஆனாலும் இன்றும் விரியமாய் பரவுகிறது உனது கருத்தியல் சீர்காழியில் #விடுதலை சிறுத்தைகள்   கட்சி #தந்தை பெரியார் திராவிடர் கழகம்  இனைந்து  நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நாகை மாவட்ட தலைவர் - பரசுராம்
நாகை மாவட்ட  செயலாளர் ப.பெரியார் செல்வம் - சீர்காழி நகர தலைவர் மனோஜ் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார்
நகர செயலாளர் பார்த்திபன் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார்  மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி
தந்தை பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொள்ளாச்சியில் (24-12-18) காலை 10 மணியளவில் வீரவணக்கம் நிகழ்ச்சி தந்தை பெரியார் திராவிடர் கழக வெளியீட்டுச் செயலாளர் இரா.மனோகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர கழக செயலாளர் அசோக் கருப்புசாமி, திமுக.விசிக.சி.பி.எம்.ஆ.த.பே.மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சீனி விடுதலை அரசு தலைமையில்  தந்தை பெரியார் சீலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி  ஒருங்கிணைப்பாளர் டைசன்,  விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Last modified on Thursday, 27 December 2018 08:47

Related Video

Image Gallery

back to top