app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Sunday, 30 December 2018 17:23

மடத்துக்குளம்- மக்களின் கரங்களில் பெரியார்"

மக்களின் கரங்களில் பெரியார்"

மடத்துக்குளம் ஒன்றிய பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொள்கைப் பிரச்சாரம் கடந்த மாதம் நடைபெற்ற உடுமலை மடத்துக்குளம் த.பெ.தி.க மாதாந்திரக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தந்தை பெரியாரின் 45 ஆவது நினைவு நாள் நிகழ்வாக அவருடைய கொள்கைகள் “இவர்தாம் பெரியார்” என்ற சிறு புத்தக வடிவில் உடுமலை மடத்துக்குளம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மடத்துக்குளம் ஒன்றியப் பகுதியில் இன்று (30.12.2018) மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணிக்கு கொழுமத்தில் கடை வீதியில் கொள்கை விளக்கப் பிரச்சாரம் துவங்கப்பட்டு 4 மணிக்கு கொமரலிங்கத்தில் நிறைவு செய்யப் பட்டது. இரண்டு ஊர்களிலும் உள்ள கடைவீதிகளில் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டபோது அவர்கள் எந்தவித மறுப்போ, ஆட்சேபணையோ இன்றி மகிழ்ச்சியோடு பணம் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொண்டனர். இப்பிரச்சாரத்தில் திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் மோகன் குமார், உடுமலை நகரத் தலைவர் யாழ் நடராசன், உடுமலை நகர செயலாளர் ரமேஷ், உடுமலை ஒன்றிய அமைப்பாளர் விசு, கடத்தூர் கதிரவன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.