app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Thursday, 07 February 2019 17:43

10% இட ஒதுக்கீட்டை கண்டித்து உடுமலைப்பேட்டையில் பிரச்சாரம் துவங்கப்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழக - உடுமலைப்பேட்டை.

உடுமலைப்பேட்டையில் மத்திய பி.ஜே.பி அரசின் "பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை" கண்டித்து *தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்* பிரச்சார இயக்கம் தொடக்கம்.

மத்திய பி.ஜே.பி அரசின் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து,
*வறுமை ஒழிப்புத் திட்டமல்ல இட ஒதுக்கீடு*

என்கின்ற புத்தகத்தின் மூலமாக பொது மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இன்று 14-2-2019 காலை 11 மணிக்கு உடுமலைப்பேட்டையில் பிரச்சாரம் துவங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரம் நடைபெபெற்றது .

இப்பிரச்சாரத்தில் உடுமலை நகரத் தலைவர் யாழ் நடராசன், உடுமலை நகர செயலாளர் ரமேஷ் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் மோகன் குமார் மற்றும் தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.