app

மொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?
Saturday, 25 August 2012 11:02

கருவறை நுழைவுப் போராட்டம்

 

18.08.2012 அன்று கோவை இராமநாதபுரம் S.N. திருமண மண்டபத்தில் பெரியார் திராவிடர் கழகமாக இயங்கி வந்த தோழர்கள் ஆனூர் செகதீசன் தலைமையிலும், வழக்கறிஞர் செ.துரைசாமி, கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் முன்னிலையில் ஒன்று கூடி எதிர்கால திட்டங்கள் குறித்து தீர்மானித்தனர்.


தமிழகம் முழுவதிலும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெரியார் தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன.


இந்திய அரசியல் சட்டத்தின் 17வது பிரிவில் ‘சாதி ஒழிப்பு’ என்பதற்குப் பதிலாக பார்ப்பனர் சூழ்ச்சியால் 'தீண்டாமை ஒழிப்பு' என்று எழுதப்பட்ட காரணத்தால், சட்டப்படி சாதி பாதுகாக்கப்படுகிறது.


தந்தை பெரியாரின் பேருழைப்பால் இன்றைய தினம் பெரும்பாலான இடங்களில் சாதி ஒழிக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் பார்ப்பன ஆதிக்கமான கோவில் கருவறையில் மட்டும் பார்ப்பனர் அல்லாதார் நுழையக்கூடாதென்று நிலை இருப்பதால் அரசியல் சட்டத்தின் 17வது பிரிவைத் திருத்தி 'தீண்டாமை ஒழிப்பு' என்ற சொல்லுக்கு பதிலாக ‘சாதி ஒழிப்பு’ என்று திருத்தம் கொண்டுவர வற்புறுத்தி தந்தை பெரியாரின் நினைவு நாளான திசம்பர் 24ஆம் நாள் (2012) அன்று, சாதி சனாதனத்தின் கடைசிப் புகலிடமான கோவில் கருவறையில் நுழையும் கருவறை நுழைவுப் போராட்டத்தை சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது. கருவறை நுழைவுப் போராட்டத்தை விளக்கும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.

 

Last modified on Saturday, 22 September 2012 08:23

Related Video